பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக விமரிசித்த ரசிகர்கள்: பாடகி சின்மயி கண்டனம்!

பெண் பத்திரிகையாளரான தன்யா ராஜேந்திரன், விஜய் நடித்த சுறா படம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார்...
பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக விமரிசித்த ரசிகர்கள்: பாடகி சின்மயி கண்டனம்!
Updated on
1 min read

பெண் பத்திரிகையாளரான தன்யா ராஜேந்திரன், விஜய் நடித்த சுறா படம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார். விஜய் நடித்த சுறா படத்தை இடைவேளை வரை பார்த்து பிறகு வெளியேறிவிட்டேன். ஆனால் ஜப் ஹாரி மெட் சேஜல் படத்தை இடைவேளை வரைக்கும் கூட பார்க்கமுடியவில்லை என்று ட்வீட் செய்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்து பலர் தன்யாவுக்கு எதிராக ட்வீட்களை வெளியிட்டார்கள்.

ஆனால் அவ்வகையான ட்வீட்கள்  மோசமாகவும் ஆபாசமான முறையிலும் இருந்தன. இதனால் தன்னுடைய ட்வீட்டை தன்யா பிறகு நீக்கிவிட்டார். ஆனாலும் மோசமான வார்த்தைகளைக் கொண்ட ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தன்யாவுக்கு எதிரான ஆபாசமான ட்வீட்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. 

இதையடுத்து அதுபோன்று ட்வீட் செய்தவர்களுக்குக் கண்டனம் தெரிவித்தும் தன்யாவுக்கு ஆதரவாகவும் பலர் ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் நடிகர் விஜய், தனது ரசிகர்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாடகி சின்மயி இந்த விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் ட்வீட்டில் தெரிவித்ததாவது: தங்களுடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மற்றவர்களை இழிவுபடுத்துவதைத் தடுத்து நிறுத்தவேண்டும். மோசமான வார்த்தைகளைக் கொண்ட ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்வதையும் தடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com