தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

என் வயதுக்குரிய காதல் படங்களில்தான் நடிப்பேன்: மாதவன் உறுதி

News image
Updated On :16 ஆகஸ்ட் 2017, 7:13 am

இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என மாதவன் நடிக்கும் படங்கள் வேறு வகையாக உள்ளன. காதல் படங்களில் நடித்து புகழ்பெற்ற மாதவன் தற்போது வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். 

ஏன்? இனியும் காதல் படங்களில் அவர் நடிக்கமாட்டாரா?

இதுகுறித்து 47 வயது மாதவன் பேட்டியளித்ததாவது:

காதல் படங்களில் நடிப்பதை நான் மிகவும் விரும்புவேன். ஆனால் என் வயதுக்கேற்ற காதல் படங்களில் நடிப்பதே சரி. இனியும் நான் சாக்லேட் பாய் கிடையாது. அதேசமயம் காதல் எப்போதும் என் வாழ்வில் இருக்கும். 

இனியும் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து என்னை முட்டாளாக்கிக்கொள்ள விரும்பவில்லை. மேலும் என் வசம் சாக்லேட் பாய்க்கு உரிய அம்சங்கள் தற்போது இல்லை எனக் கருதுகிறேன். காதல் படங்களில் இனி நடித்தாலும் அது என் வயதுக்குரிய வேடமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.

மாதவன் தற்போது Chanda Mama Door Ke என்கிற ஹிந்திப் படத்தில் நடித்துவருகிறார். ஜனவரி 26, 2018 அன்று இந்தப் படம் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.