என்னுடைய மூன்று பெரிய ஹிட்களில் ஒன்று, விஐபி2: தனுஷ்
வேலையில்லா பட்டதாரி 3 படத்தை நிச்சயம் எடுப்போம். இதற்கான வாய்ப்புகள் ஏற்கெனவே...


வேலையில்லா பட்டதாரி 2 படம் தன்னுடைய வெற்றிப் படங்களில் முக்கிய இடம் வகிப்பதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
இந்தப் படம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தனுஷ் கூறியதாவது:
இந்தப் படத்தை முதல் பாகத்தோடு நிச்சயம் ஒப்பிடுவார்கள் எனத் தெரியும். எனவே அத்தகைய ஒப்பீடுகளுக்குத் தயாராகவே இருந்தோம். முதல் பாகத்துடன் இரண்டாம் பாகம் போட்டிபோட முடியாது என்றும் அறிந்திருந்தோம்.
என்னுடைய மூன்று பெரிய ஹிட்களில் விஐபி2-வும் ஒன்று. எப்போது என்று தெரியவில்லை. ஆனால் வேலையில்லா பட்டதாரி 3 படத்தை நிச்சயம் எடுப்போம். இதற்கான வாய்ப்புகள் ஏற்கெனவே வந்துவிட்டன என்றார்.
தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 11 அன்று உலகம் முழுக்க 1000 திரையரங்குகளில் வெளியானது. தமிழில் ஆகஸ்ட் 11 அன்று வெளியான இந்தப் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகிறது. இதன் ஹிந்திப் பதிப்பு வடஇந்தியாவில் 1600 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...