

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றுள்ளது. இத்தகவலை அவர் உறுதி செய்துள்ளார்.
இனிமேல் நான் சிங்கிள் கிடையாது. அனைவருடைய ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறேன். நன்றி என்று ட்விட்டரில் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதினார். இதையடுத்து திருப்பதியில் ஆதிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக முதலில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் நேற்று ஆதிக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: ஆமாம். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. சென்னையில் நடைபெற்ற சிறிய விழாவில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது என்று அவர் கூறினாலும் மனைவியின் பெயர் மற்றும் இதர விவரங்களை வெளியிட மறுத்துள்ளார். எனினும், ட்விட்டரில் தனது திருமணப் புகைப்படத்தை ஆதி வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.