ஐஸ்வர்யா ராய் பச்சன் மங்களூருக்கு எதற்குச் சென்றார்?

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மங்களூரில் தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் பச்சன் மங்களூருக்கு எதற்குச் சென்றார்?
Published on
Updated on
1 min read

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மங்களூரில் தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டார்.

அவரது மாமா உதய குமார் ஷெட்டியின் மகனான பிரஜ்வாலின் திருமண நிகழ்விற்காக ஐஸ்வர்யா ராய் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இத்திருமண நிகழ்வில் மகள் ஆராத்யா மற்றும் அம்மா விருந்தா ராயுடன் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். 

தங்க நிற எம்பிராய்டரி போடப்பட்ட சிவப்பு நிறச் சேலை அணிந்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் இந்த முன்னாள் உலக அழகி. மகள் ஆரத்யாவிற்கும் அதே டிசைனில் உடை அணிவித்திருந்தார் ஐஸ்வர்யா.

தனது தாய் மொழியான துளுவில் உறவினர்களிடம் பேசி மகிழ்ந்த ஐஸ்வர்யா ராய், பெரியவர்களிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com