

'ஜுராஸிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்' (Jurassic World: Fallen Kingdom) படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் யூ-டியூபில் வெளியிடப்பட்டது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் வெளி வர உள்ள இந்தப் படத்தை ஜே.ஏ.பயானோ (J.A.Bayona) இயக்குகிறார். இந்தப் படம் 2018 ஜுன் மாதம் 22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. மேலும் வெளியான மூன்று நாட்களிலேயே இந்த ட்ரெய்லருக்கு 20 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். தற்போது கிட்டத்தட்ட 30 மில்லியனை நோக்கி இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
1993-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 'ஜுராஸிக் பார்க்' வெளியாகி உலக ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்தப் படம் மூன்று ஆஸ்கர் விருதுகள் உட்பட 20 விருதுகளை வென்றது. 'ஜுராஸிக் பார்க்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஜுராஸிக் பார்க் 2', 'ஜுராசிக் பார்க் 3' ஆகிய படங்களும் வெளி வந்து ஜுராஸிக் பட வரிசை டிரையாலஜியை பூர்த்தி செய்தன
விடாது கருப்பு என்பது போல் டைனோசர் படங்களுக்கு உள்ள வரவேற்பும் வணிகமும் உலக திரை ரசிகர்களை ஆக்ரமிக்க, 2015-ம் ஆண்டு வெளிவந்த 'ஜுராஸிக் வேர்ல்ட்' அதற்கு சரியான தீனியாக இருந்தது. மீண்டும் ஒரு டினோஸர் வகையறா படங்களின் தொடக்கமாக திகழ்ந்து வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்தப் படத்தின் அடுத்த பாகமாக வெளிவர உள்ளது ஜுராஸிக் வேர்ல்ட் : ஃபாலன் கிங்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.