ரஜினியின் பிறந்த நாளன்று இப்படி ஒரு போஸ்டரை ஏன் வெளியிடவேண்டும்? ரஜினி ரசிகர்கள் ஆர்யாவிடம் கேட்ட கேள்வி!

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற அடல்ட்ஸ் ஒன்லி இன வகைப் படங்களை
ரஜினியின் பிறந்த நாளன்று இப்படி ஒரு போஸ்டரை ஏன் வெளியிடவேண்டும்? ரஜினி ரசிகர்கள் ஆர்யாவிடம் கேட்ட கேள்வி!
Updated on
1 min read

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற அடல்ட்ஸ் ஒன்லி இன வகைப் படங்களை தொடர்ந்து, சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் என்ற படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதன் அறிவிப்பை நடிகர் சூர்யா போஸ்டர் வெளியீடு மூலம் தெரிவித்துள்ளார்.


நேற்று (டிசம்பர் 11) ஆர்யாவின் பிறந்த நாள், இன்று (டிசம்பர் 12) ரஜினியின் பிறந்த நாள். இதனையொட்டி கஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

‘கஜினிகாந்த்’ போஸ்டரில் ஆர்யா நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு, வேட்டி அணியாமல் சட்டை, துண்டுடன், ஒரு கையில் பாரதியார் புத்தகம், மறுகையில் டிபன் கேரியர் சகிதம் காட்சியளிக்கிறார். இது தர்மத்தின் தலைவன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புரபஸர் கதாபாத்திரத்தை நினைவு படுத்தும் விதமாக உள்ளது.

ஆர்யா ஏன் திடீரென்று ரஜினி கெட்டப் போட்டுள்ளார், மேலும் இந்தப் படத்தின் பெயர் காரணம் என்ன போன்ற கேள்விகளை சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் எதிர்வினை செய்துள்ளனர். விரைவில் அதற்கான பதிலை அளிக்கிறோம் என்றனர் படக்குழுவினர். போலவே நடிகர் கமல் ஹாசன் பிறந்த தினத்தன்று இயக்குநர் வெங்கட் பிரபு அவரை விமரிசிக்கும் வகையில் தனது பட போஸ்டரை வெளியிட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com