நீங்கள் என்னை கொன்றாலும், நான் எனது மரணத்தையும் கொண்டாடுவேன்! லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிலடி!

நீங்கள் என்னை கொன்றாலும், நான் எனது மரணத்தையும் கொண்டாடுவேன்! லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிலடி!
நீங்கள் என்னை கொன்றாலும், நான் எனது மரணத்தையும் கொண்டாடுவேன்! லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிலடி!

அருவி திரைப்படம் வெளிவந்த முதல் இரண்டு நாட்கள் பாராட்டு மழையில் நனைந்தது. ஆனால் அடுத்தடுத்து இப்படம் குறித்து சில விமரிசனங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கேலி செய்து எடுக்கப்பட்ட காட்சிகள் மீடியாவில் விமரிசனத்துக்குள்ளாகி உள்ளது. இந்தப் படத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைக் கேலி செய்து சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ட்விட்டரில் தனது வருத்தத்தைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் இயக்குநரான நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

இதற்கு முன்னரும் இந்த நிகழ்ச்சியை சில படங்களும், மற்றொரு சானலின் நிகழ்ச்சியொன்றிலும் தொடர்ந்து கேலி செய்தனர். ஆனால், அருவியில் கதையின் சில காட்சிகளை தவறாக சித்தரித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய கருத்துக்களை டிவிட்டரில் கூறி வருகிறார். உடனே அதற்கும் ரசிகர்கள் எதிர்வினை செய்யத் தொடங்க இணையத்தில் இது பெரும் சர்ச்சையாகிவிட்டது.

முதல் டிவிட்டர் பதிவு

ஒரு பெண்ணாக, அதுவும் வெளிப்படையாகப் பேசுபவராக, ஊடகத்தில் உள்ளவராக, ஓரளவு வெற்றியடைந்தவராக, பிராமணச் சமூகத்தில் பிறந்து, அதிலும் பாலக்காடு ஐயர் உச்சரிப்பு கொண்டவராகத் தமிழ்நாட்டில் வாழ்வதென்பது ஹெச்.ஐ.வியால் பாதிப்படைவதை விடவும் மோசமானது. இந்த வைரஸ் குறித்து யாராவது ஏன் படம் எடுக்கக் கூடாது? இதுபோன்று பெண்களை இழிவுபடுத்துவர்களை ஏன் கடத்தக்கூடாது என்று தனது வருத்தத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தினார். மேலும் அவர் அருவி திரைப்படம் அஸ்மா எனும் அரேபிய மொழித் திரைப்படத்தின் சாயலில் உள்ளது என்றும்  கருத்து தெரிவித்தார்.

டெலீட் செய்யப்பட்ட டிவிட்டர் பதிவு

இதனை தொடர்ந்து சில கருத்துக்களை ட்விட்டரில் பேசி, அந்த நிகழ்ச்சிக்கு பின் என்ன நடக்கும் என்பதைச் சொல்லும்விதமாக ஒரு வீடியோ வெளியிட்டார். இதில் சிலர் லட்சுமி ராமகிருஷ்ணன் காலில் விழுவதற்கு முயல, அதை அவர் தடுப்பது போல் பதிவு செய்யப்பட்டிருந்தது. என்ன காரணத்தாலோ வெளியிட்ட சிறிது நேரத்தில் அதை டெலிட் செய்துவிட்டார். {pagination-pagination}

சமீபத்திய டிவிட்டர் பதிவு

ரசிகர்கள் அருவி குறித்து தொடர் விமரிசனம் செய்துவர, லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அம்மணி படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு நீங்கள் என்னை கொன்றாலும் நான் அதையும் கொண்டாடுவேன் என பதிவு செய்துள்ளார்.  

லட்சுமி ராமகிருஷ்ணனின் ட்வீட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com