
கடந்த 13 ஆண்டுகளில், ஆளுங்கட்சி வேட்பாளரை தோற்கடித்த முதல் வேட்பாளர் என்ற பெருமையை டிடிவி தினகரன் பெற்றுள்ளதைத் தொடர்ந்து அவருக்கு பலதரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், தனது வாழ்த்தினை ஒரு அறிக்கையாகவும் வெளியிட்டதுடன் டிவிட்டரிலும் பதிவிட்டுள்ளார் விஷால். அதில் விஷால் குறிப்பிட்டுள்ளது : 'அபார வெற்றி பெற்றிருக்கும் தினகரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளுக்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர். மீனவர்களின் பிரச்னைகளுக்கும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
தினகரன் இத்தகைய பிரச்னைகளை தீர்த்து வைப்பார் என்று ஆர்கே நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன். மக்கள் பணியில் தினகரனுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள்’என்று பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.