

சல்மான் கான், கத்ரினா கயிஃப் நடிப்பில் அலி அப்பாஸ் ஜஃபர் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் - டைகர் ஜிந்தா ஹை (Tiger Zinda Hai). இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இந்த இலக்கை எட்டும் சல்மான் கானின் 12-வது படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு நடிகரின் படங்களும் இத்தனைமுறை ரூ. 100 கோடி வசூலைத் தொட்டதில்லை.
அதிகபட்சமாக, இவருடைய Bajrangi Bhaijaan படம் இந்தியாவில் ரூ. 320 கோடி வசூலை அடைந்தது. இதுதவிர சல்மான் நடித்த சுல்தான் படமும் இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலைத் தொட்டது.
ரூ. 150 கோடி செலவில் உருவான டைகர் ஜிந்தா ஹை படம் இந்தியாவில் முதல் நாளன்று ரூ. 34.10 கோடியும் இரண்டாவது நாளில் ரூ. 35.30 கோடியும் மூன்றாவது நாளில் ரூ. 45. 53 கோடியும் வசூலைப் பெற்று சூப்பர் ஹிட் படம் என்கிற கெளரவத்தை எட்டியுள்ளது.
முதல் மூன்று நாள்களில் அதிக வசூல் செய்த சல்மான் கான் படங்கள்
டைகர் ஹிந்தா ஹை- ரூ. 114.93 கோடி
சுல்தான்- ரூ. 105.53 கோடி
பஜ்ரங்கி பைஜான்- ரூ. 102.60 கோடி
டியூப்லைட்- ரூ. 64.77 கோடி
2017-ல் இந்திய அளவில் முதல் நாளன்று அதிக வசூல் கண்ட படங்கள்
இந்திய அளவில் 2017-ல் முதல் நாளன்று அதிக வசூல் கண்ட படங்களில் டைகர் ஜிந்தா ஹை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
1 பாகுபலி 2 (ஹிந்தி) ரூ. 41 கோடி
2 டைகர் ஹிந்தா ஹை ரூ. 34.10 கோடி
3 கோல்மால் அகைன் ரூ. 30.14 கோடி
4 டியூப்லைட் ரூ. 21.15 கோடி
5 ரயீஸ் ரூ. 20.42 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.