

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பலூன். இசை - யுவன் சங்கர் ராஜா.
டிசம்பர் 29 அன்று வெளியாகும் இப்படத்தை இணையத்தளத்தில் வெளியிடவேண்டாம் என்று சட்டவிரோதமாகத் திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தின் நிர்வாகத்திடம் இப்படத்தின் இயக்குநர் சினிஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ட்விட்டரில் இதுபற்றி சினிஷ் கூறியதாவது:
பலூன் படத்தை சட்டவிரோதமாக 2650 இணையத்தளங்களில் பதிவேற்றுவதை சென்னை உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. எப்படியும் தமிழ் ராக்கர்ஸைத் தடை செய்யமுடியாது. தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. ஒரு வாரம் டைம் கொடுத்தால் என் தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார் என்று ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.