தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சலீம், தர்மதுரை ஆகிய படங்களைத் தயாரித்தவர். தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவருக்கும், ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நடிகை திவ்யாவுக்கும், டிசம்பர் 2017-ல் திருமணம் நடக்கப் போவதாக கடந்த செப்டம்பர் மாதம் அவர்களே பிரஸ் மீட்டில் அறிவித்திருந்தனர்.
சமீபத்தில் அவர்களது திருமணம் பற்றிய எந்த தகவலும் இல்லை. இருவரது ஜாதகத்திலும் சில பிரச்னைகள் இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டனர் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் அவர்களது திருமணம் நடக்கும் என்று வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று இவர்கள் இருவரும் தங்களது நெருங்கிய வட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
தற்போது 'பில்லா பாண்டி', 'வேட்டை நாய்கள், ''தனி முகம்'' போன்ற படங்களில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.