பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை’! 

புதுமுக இயக்குனர் ஸ்ரீனுவாசன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'அண்ணாதுரை' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 பிப்ரவரி 2017, 8:17 am

DIN

சென்னை: புதுமுக இயக்குனர் ஸ்ரீனுவாசன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'அண்ணாதுரை' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

தன்னுடைய திரைப்படங்களுக்கு எப்போதுமே வித்தியாசமான தலைப்புகளை தேர்ந்தெடுப்பது விஜய் ஆண்டனியின் தனித்துவமான சிறப்பு. அந்த வகையில், அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம், தமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வரும் தலைச் சிறந்த தலைவரான 'அண்ணாதுரை' யின் பெயரை பெற்று இருக்கிறது. 

'ஐ பிச்சர்ஸ்' சார்பில் ஆர் சரத் குமார் மற்றும் ராதிகா சரத் குமார் தயாரிக்கும் இந்த 'அண்ணாதுரை' படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்க இருக்கிறார். இவர் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

"விஜய் ஆண்டனி போன்ற நட்சத்திர கதாநாயகனோடும், 'ஐ பிச்சர்ஸ்' போன்ற மிக பெரிய தயாரிப்பு நிறுவனத்தோடும் என்னுடைய முதல் படத்திலேயே இணைந்து பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகின்றேன். தற்போது படப்பிடிப்புக்கான பணிகளில் நாங்கள் மும்மரமாக  ஈடுபட்டு வருகிறோம், இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் 'அண்ணாதுரை' படத்தின் மற்ற நடிகர் - நடிகைகள் மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்களை வெளியிட முடிவு செய்து இருக்கின்றோம்" என்று இயக்குநர் ஸ்ரீனுவாசன் உற்சாகமாக கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.