ஹீரோ தனுஷ், நட்புக்காக ராணா டகுபட்டி!

தமிழிலும் கணிசமான ரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ள ராணா ஏன் வெறும் 30 நிமிடங்களுக்கு ஒரு படத்தில் தோன்றி நடிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு; எல்லாம் நட்புக்காக! என்று பதில் வந்தது.
ஹீரோ தனுஷ், நட்புக்காக ராணா டகுபட்டி!
Updated on
1 min read

தனுஷ் நாயகனாக நடிக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் 'என்னை நோக்கிப் பாயும் தோட்டாவில்' ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபட்டி நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்து கொண்டிருந்தன. இதைப் பற்றி சினிமா நிருபர்கள் ராணாவிடம் கேட்டதற்கு ராணா ‘ வந்த செய்தி உண்மை தான்.  ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ வில் கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறேன். இதற்காக 30 நிமிடக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டன’ என்று பதிலளித்தார். பாகுபலி படத்தால் குறைந்த காலத்தில் தமிழிலும் கணிசமான ரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ள ராணா ஏன் வெறும் 30 நிமிடங்களுக்கு ஒரு படத்தில் தோன்றி நடிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு; எல்லாம் நட்புக்காக! என்று பதில் வந்தது. ராணாவுக்கும் இயக்குநர் கெளதம் மேனனுக்கும் இடையிலான நட்பின் இறுக்கம் தான் நட்புக்காக ராணாவை நடிக்க வைத்துள்ளது என்கிறது டோலிவுட் பட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com