
சென்னை: மத்திய மற்றும் மாநில அரசுகளின் இரட்டை வரி விதிப்பு முறையின் காரணமாக அதிக அளவு வரியை எதிர்கொள்ளும் தமிழ் சினிமாவை காப்பற்றுங்கள் என்று இயக்குனர் ஷங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு விதித்துள்ள 28% ஜி.எஸ்.டி வரியுடன், தமிழக அரசின் 30% கேளிக்கை வரியும் இணைவதால், திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை நீக்க வலியுறுத்தி தென் இந்திய திரைப்பட வர்த்தக சபையின் சார்பாக இன்று முதல் தமிழகம் முழுவதும் 1000 திரை அரங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருது தெரிவித்துள்ளார். அதில் அவர், '48 முதல் 58 சதவீத வரியா? அதிக அளவு வரி..! தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் ' என்று ட்வீட் செய்துள்ளார்.
அவரது இந்த ட்வீட்டுக்கு பயனாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.