ரஜினியுடன் நடிக்க இயக்குனர் ரஞ்சித்தின் அழைப்புக்கு காத்திருக்கும் தனுஷ்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'காலா' திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்க, இயக்குனர் ரஞ்சித்தின் அழைப்புக்கு காத்திருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'விஐபி' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'விஐபி-2' வரும் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிaகை கஜோல் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நடிகர் தனுஷ் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:
'விஐபி' படத்திற்கு இரண்டாம் பாகத்திற்கான கதையினை எழுதுவதற்கு எனக்கு மூன்று வருடங்கள் தேவைப்பட்டது. அது மிகவும் சவாலான ஒரு பணியாக இருந்தது. 'கொடி' திரைப்பட படப்பிடிப்பின் பொழுதான் இரண்டாம் பாகத்துக்கான கதை எழுதலாம் என்று தோன்றியது. அத்துடன் நிற்கவில்லை..தற்பொழுது மூன்றாம் மற்றும் நான்காம் பாகங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
'விஐபி-2' படத்தில்நடிகை கஜோலுடன் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அவரது கடைசி தமிழ் படமான 'மின்சார கனவு' வெளிவநத பொழுது, நான் பத்தாம் வகுப்பு மாணவன். அவர் தன்னுடைய மறு பிரவேசத்திற்கு எங்கள் படத்த்தினை தேர்வு செய்தது எங்களுக்கு மிகவும் பெருமை தருகிறது.'விஐபி-3' படத்திலும் கஜோல் கண்டிப்பாக இடம்பெறுவார்.
தன்னுடைய இயக்கத்தில் வெளி வந்த முதல் படமான 'பவர் பாண்டி' வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தனுஷ், அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும் என்று தெரிவித்தார்.
தன்னுடைய மாமனார் ரஜினிகாந்தை வைத்து தான் தயாரித்து வரும் 'காலா' படத்தில் சிறுவேடத்தில் தனுஷ் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து கேட்ட பொழுது,'சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன். காலாவில் நடிக்க இயக்குனர் ரஞ்சித்தின் அழைப்புக்கு காத்திருக்கிறேன்' என்று தனுஷ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.