தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மூன்று நாள்களில் படப்பிடிப்பு: தேனிலவுத் திட்டம் இல்லை: திருமணம் பற்றி சமந்தா

சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் அக்டோபர் 6 அன்று கோவா-வில் திருமணம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2017, 11:20 am

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இதையடுத்து சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் அக்டோபர் 6 அன்று கோவா-வில் திருமணம் நடைபெறவுள்ளது.

இதுபற்றி ஆங்கிலப் பத்திரிகையில் அளித்த பேட்டியில் சமந்தா கூறியதாவது:

ஆமாம். அக்டோபர் 6-ம் தேதி எங்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் ஹைதராபாத்தில் நடைபெறவில்லை. கோவா-வில் நடைபெறுகிறது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே அதில் கலந்துகொள்ளவுள்ளார்கள். இது நடுத்தரக் குடும்பத்தின் திருமணம். செய்திகளில் வெளியிட்டதுபோல விமரிசையாக எல்லாம் நடைபெறாது. 

அடுத்த மூன்று நாள்களில் இருவரும் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பவேண்டும். எனவே இப்போதைக்கு தேனிலவு குறித்து எதுவும் திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார். 

சமந்தா தற்போது ஏழு படங்களில் நடித்துவருகிறார். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் நடித்துமுடித்த பிறகு தாற்காலிகமாக நடிப்பிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.