கேளிக்கை வரி விவகாரம்: முதல்வருடன் ஆலோசித்த பிறகே முடிவு!

கேளிக்கை வரி ரத்து தொடர்பாக முதல்வர் மற்றும், அமைச்சர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும்... 
கேளிக்கை வரி விவகாரம்: முதல்வருடன் ஆலோசித்த பிறகே முடிவு!

திரையரங்குகளுக்கான கேளிக்கை வரி தொடர்பான பேச்சு வார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. 

சினிமா டிக்கெட் கட்டணத்தில் ஜிஎஸ் டி}யுடன் கூடுதலாக விதிக்கப்பட்ட 30 சதவித கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள குழுவுக்கும், திரையுலக அமைப்பைச் சேர்ந்த குழுவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இதுதொடர்பான முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் உள்துறை செயலாளர்கள் மற்றும் தொழில்துறை செயலாளர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ் திரையுலகினர் சார்பில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல இன்றும் கேளிக்கை வரி தொடர்பான கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தனது இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிகிறது என்று விஷால் முன்பு பேட்டியளித்தார்.

ஆனால் இந்தக் கூட்டத்தின் முடிவிலும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. 

கேளிக்கை வரி ரத்து தொடர்பாக முதல்வர் மற்றும், அமைச்சர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதாக அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com