பழம்பெரும் பாலிவுட் நடிகை நர்கீஸ் வேடத்தில் மனீஷா கொய்ராலா!

மறைந்த பாலிவுட் பிரபலமான நடிகை நர்கீஸின் மகன் தான் சஞ்சய் தத். திரைப்படத்தில் நர்கீஸாக நடித்திருப்பவர் நடிகை மனீஷா கொய்ராலா.
பழம்பெரும் பாலிவுட் நடிகை நர்கீஸ் வேடத்தில் மனீஷா கொய்ராலா!
Updated on
1 min read

சஞ்சய் தத்தின் வாழ்க்கை சித்திரத்தை திரைப்படமாக்கிக் கொண்டிருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. இன்னும் பெயரிடப் படாத அந்த திரைப்படத்தில் சஞ்சய் தத்தாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரன்பீர் கபூர். சஞ்சய் தத்தின் வாழ்க்கையைப் படமாக்கினால் அதில் மிக முக்கியமான இடம் அவரது அம்மாவுக்கும் உண்டு. மறைந்த பாலிவுட் பிரபலமான நடிகை நர்கீஸின் மகன் தான் சஞ்சய் தத். திரைப்படத்தில் நர்கீஸாக நடித்திருப்பவர் நடிகை மனீஷா கொய்ராலா.

தமிழில் மனிஷாவை அறியாதவர்கள் எவருமில்லை. 90 களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகை தான் மனிஷா. நேபாளத்தைச் சேர்ந்தவரான நடிகை மனீஷா கொய்ராலா இடையில் சில காலம் புற்றுநோயால் அவஸ்தைப் பட்டார். தற்போது அதிலிருந்து மீண்டு திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். 

தற்போது நர்கீஸ் வேடத்தில் மனீஷா நடித்த பகுதிகளின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி,  வெள்ளியன்று மனீஷா நடிப்பில் வெளியான ‘ டியர் மாயா’ திரைப்படத்தின் வெற்றிக்காக மனீஷாவுக்கு தனது ட்விட்டர் தளத்தில் வாழ்த்துச் செய்தி பகிர்ந்திருக்கிறார். 

இத்திரைப்படத்தில் ரன்பீர், மனீஷாவுடன் இணைந்து அனுஷ்கா ஷர்மா, பரேஸ் ராவல், தியா மிர்ஷா, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 30 ல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக கதையை எழுதி இயக்குபவர் ராஜ்குமார் ஹிரானி. படத்தயாரிப்பு விது வினோத் சோப்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com