

நடிகை ஷோபனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
1984ம் வருடம் ஏப்ரல் 18 என்கிற மலையாளப் படம் மூலமாகத் திரையுலகுக்கு வந்தவர் நடிகை ஷோபனா. இவர் தமிழில் நடித்த முதல் படம், மங்கள நாயகி. 84-ல் கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்தார். ஷோபனா, சென்னையில் பரதநாட்டியப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார்.
ஷோபனா 2001-ல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். இத்தனை ஆண்டுகாலமாகத் திருமணம் செய்யாமல் இருந்த ஷோபனா, தற்போது தன் குடும்ப நண்பர் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இச்செய்தி குறித்து ஷோபனா இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.