பாலிவுட்டை கலக்கும் கரீனா கபூர் கானின் மகன் தைமூர் அலி கானின் புகைப்படங்கள்!

பாலிவுட்டை தன் அழகாலும் வசீகரத்தாலும் நடிப்புத் திறனாலும் கவர்ந்து ரசிகர்களின்
பாலிவுட்டை கலக்கும் கரீனா கபூர் கானின் மகன் தைமூர் அலி கானின் புகைப்படங்கள்!
Published on
Updated on
2 min read

பாலிவுட்டை தன் அழகாலும் வசீகரத்தாலும் நடிப்புத் திறனாலும் கவர்ந்து ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடித்த கரீனா கபூர் கானுக்கு இப்போது உலகமே தன்னுடைய சின்னஞ்சிறிய மகன் தைமூர் அலி கான் தான். மீடியாவும் சரி கரீனாவின் ரசிகர்களும் சரி தைமூரின் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டால் உச்சி முகர்ந்து பாராட்டு மழை பொழிகிறார்கள். காரணம் தைமூரின் அழகும் சிரிப்பும் அவ்வளவு அழகு. பிறந்த தினம் முதல் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் தற்போது வரை பல தடவை தலைப்புச் செய்தியாகியிருக்கிறான் தைமூர். இவ்வளவுக்கு ஏன், அவன் பிறப்பதற்கு முன்னரே மீடியாவின் பிரியத்துக்குரியவனாகி விட்டவன். நிறைமாதத்தில் கரீனாவின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து கவனம் பெற்றன.

குழந்தை பிறந்த பிறகு அவனுடைய பெயரை குறித்த சர்ச்சை எழுந்தது. கரீனா கபூர் சைஃப் அலி கான் தங்கள் குழந்தைக்கு ‘தைமூர்’ என ஆசையாகப் பெயர் சூட்டினர்.  ஆனால் இந்தியர்களை கொன்ற மங்கோலிய மன்னன் பெயரை வைப்பதா? என இப்பெயருக்கு எதிர்ப்பு பரவலாக இருந்து வந்தது. இந்தியா மீது 14–ம் நூற்றாண்டில் படையெடுத்து பலரைக் கொன்று குவித்த மங்கோலிய மன்னன் பெயரே தைமூர் என்று தெரிய வந்ததும் சைஃப் குழந்தையின் பெயரை மாற்ற முடிவு செய்தார். ஆனால் கரீனா இதற்குச் சம்மதிக்கவில்லை. 

இப்படி தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களைப் பற்றி எதுவும் தெரியாமல் மழலை உலகில் பொக்கை வாய் தெரிய சிரிக்கும் சிரிப்புப் புகைப்படங்கள் எல்லாமே மீடியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. தைமூருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை இப்போதே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 'தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை' என்பதற்குத் தகுந்தாற் போல தைமூர் அம்மாவை விட அதிகமான கவன ஈர்ப்பைப் பெற்று வருகிறான். இதனால் அம்மா கரீனாவுக்கு சந்தோஷம் இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறது.

தைமூரின் ஒவ்வொரு படமும் இணையத்தில் வைரலாகி வருவது உண்மை. தைமூருடன் இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ் அப் டிஸ்ப்ளே பிக்சரில் வைத்திருந்த சைஃப் அலிகானுக்கு ஆச்சரியம், அடுத்த சில மணி நேரங்களில் அது நெட்டிசன்கள் மூலமாக வெளியுலகுக்கு போய்ச் சேர்வதுடன் உடனடியாக அது வைரலாகிவிடுகிறது. தைமூருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ஒரு தம்பதிகளுக்குப் பெருமை.   பி - டவுனின் க்யூட் பேபி என்ற புகழ் அவனுக்கு கிடைத்துள்ளது. அதுவும் கரீனா தைமூரை கொஞ்சி மகிழும் இந்தப் புகைப்படம் வெளிவந்த நாள் முதல் வைரலாகிவிட்டது. கரீனா மற்றும் சைஃப் அலி கானின் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்துவிட்டார்கள்.

இந்த நட்சத்திரத் தம்பதியர் குழந்தையுடன் வெளியில் வந்தால் அவர்களை க்ளிக் செய்ய மீடியா காத்துக் கிடக்கிறது.  சமீபத்தில் இந்தக் சுட்டிக் குழந்தை அம்மா கரீனாவுடனும் சித்தி கரிஷ்மாவுடனும் வெளியே வந்ததையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டது மீடியா.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com