நடிகர் ஜாஸ்பர்... பல திரைப்படங்களில் வில்லனாக இவரை நாமறிந்திருப்போம். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி, பெங்காலி திரைப்படங்களிலும் நடித்து வரும் ஜாஸ்பர் அடிப்படையில் ஒரு மென்பொறியாளர். மென்பொறியாளராக இருந்து நடிகராக மாறிய ஜாஸ்பர் தன்னை ஒரு பியூர் சென்னைவாசி என்று கூறிக் கொள்வதில் தனக்கு மிக மகிழ்ச்சி என்கிறார். ‘நம்ம ஊரு’ சென்னையைப் பொறுத்தவரை ஜாஸ்பருக்குப் பிடித்த 5 விசயங்கள் உங்களுக்கும் பிடித்தால் நீங்களும் ஒரு பியூர் சென்னைவாசி தான் என்று டிக்ளேர் செய்து கொள்ளலாம். ஏனெனில் ஜாஸ்பரு குறிப்பிடும் அந்த 5 விசயங்கள் அனைத்து சென்னைவாசிகளுக்கும் பிடித்த விசயங்களே! அவை என்னவென்று பார்ப்போமா?!
- வார நாட்களில் எலியட்ஸ் பீச்சுக்குச் செல்ல பிடிக்கும்.
- ஒரு பியூர் சென்னைவாசிக்கு மெரினா பீச், கோயம்பேடு மார்க்கெட், டி.நகர் இந்த மூன்று இடங்களும் தரக்கூடிய மன நெருக்கத்தை... உலகில் வேறு எந்த இடங்களும் தந்து விடமுடியாது.
- நான் ஒரு சென்னைவாசி.. என் வேர் இங்கே தான் இருக்கிறது. உலகில் எங்கே வேண்டுமானாலும் நான் சுற்றலாம். ஆனால் கடைசியில் நான் திரும்ப நினைக்கும் இடம் இது மட்டும் தான்.
- உலகின் எந்த மூலையில் நான் பயணித்துக் கொண்டிருந்தாலும் நான் கேட்கும் இசையாலும், என் நினைவுகளாலும் சென்னை எப்போதும் என்னுடன் இணைப்பில் இருக்கும்.
- சென்னை முழுக்க எல்லா இடங்களுமே ஏதாவது ஒரு வகையில் எனக்குப் பிடித்த இடங்களே... புதிதாக யாருக்காவது சென்னையைச் சுற்றிக் காட்ட வேண்டுமென்றால் ஒவ்வொரு இடமாக நான் விரும்பும் முழு சென்னையையும் சுற்றிக் காட்டவே விரும்புவேன்.
இவர் சொன்ன ஐந்து விதமான குணாம்சங்கள் உங்களுக்கும் இருந்தால் நீங்களும் ஒரு பியூர் சென்னைவாசியே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?

கும்ப ராசிக்கு அனுகூலம்: இன்றைய ராசி பலன்கள்!

திரைப்படக் கல்வியின் அவசியம்

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு !
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

