ரங்கஸ்தலம் 85: டோலிவுட்டைப் பற்றிக் கொண்ட பீரியட் ஃபிலிம் மோகம்!

படத்தின் சேட்டிலைட் உரிமை மற்றும் ஹிந்தி டப்பிங் உரிமைக்கு கிடைத்த வசூல் வெற்றி படத்தின் பிரமாண்ட வெற்றியை அது வெளி வரும் முன்பே உறுதி செய்துள்ளது
ரங்கஸ்தலம் 85: டோலிவுட்டைப் பற்றிக் கொண்ட பீரியட் ஃபிலிம் மோகம்!
Published on
Updated on
1 min read

வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய ருத்ரம்மா தேவி, கற்பனை சரித்திரமான பாகுபலி, கற்பனையும் கொஞ்சம் சரித்திரமும் கலந்த கெளதம புத்ர சதகர்ணி, பக்தி மணம் கமழும் நமோ வேங்கடேஷாய உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது தமிழைப் போலவே தெலுங்கிலும் பீரியட் ஃபிலிம் மோகம் பற்றிக் கொண்டுள்ளது. அதன் விளைவே ராம்சரண் தேஜா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும்  ‘ரங்கஸ்தலம் 85’ திரைப்படம்.

இத்திரைப்படம் 1985 ஆம் ஆண்டைய கதைக் களனுடன் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜேனரில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் முதல் செட்யூல் முடிவடைந்த நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. காரணம் ராம் சரணின் முந்தைய படமான  ‘துருவா’ வின் கிளாஸிக் வெற்றி ரங்கஸ்தலத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தின் சேட்டிலைட் உரிமை மற்றும் ஹிந்தி டப்பிங் உரிமைக்கு கிடைத்த வசூல் வெற்றி படத்தின் பிரமாண்ட வெற்றியை அது வெளி வரும் முன்பே உறுதி செய்துள்ளது. இன்னும் படத்தின் தியேட்டர் உரிமைக்கான விற்பனை ரேஸ் இருக்கிறது. ராம் சரணுக்கு நிச்சயம் இதுவும் ஒரு வெற்றிப் படம் தான் என்பதில் ஐயமில்லை.  பக்கா வில்லேஜ் கெட்டப்பில் வித்யாசமான ராம்சரணை இந்த திரைப்படத்தில் காணலாம். சமந்தாவும் கிராமத்துப் பெண் ரோலில் அசத்தி இருக்கிறாராம். படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இயக்கம் சுகுமார். ஒளிப்பதிவு ரத்னவேலு. படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பாக நவீன் எர்னேனி, ராம் சரண் கொனிடேலா, சிரஞ்சீவி கொனிடேலா,மோகன் செருகூரி, உள்ளிட்டோர் கூட்டாகத் தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் அரவான் புகழ் ஆதி பினிஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2018 ஆம் ஆண்டின் ’சங்கராந்திப் பண்டிகை’ அன்று வெளியிடப் படலாம் என்று படக்குழு வட்டாரம் திட்டமிட்டிருக்கிறது. ஆந்திராவில் சங்கராந்தி என்றால் இங்கே தைப்பொங்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com