கேரவன் கலாச்சாரத்தை கண்டு அதிசயிக்கும் நடிகை நிரோஷா!

நான் நடிக்க வந்த போது ஷூட்டிங் நடைபெறும் சமயங்களில் அனைத்து நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு தளத்துக்குள் ஒன்றாக இணைந்து அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்போம். இன்று அப்படியொரு காட்சியைக் காணவே 
கேரவன் கலாச்சாரத்தை கண்டு அதிசயிக்கும் நடிகை நிரோஷா!
Published on
Updated on
1 min read

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் டோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கவிருக்கும் நடிகை நிரோஷா இன்றைய இளம் தலைமுறை நடிகர்களைப் பார்த்து வெகுவாக வியந்து போகிறார். இன்றைய இளம் நடிகைகள் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னரே நடிப்பிற்குத் தேவையான திறமைகளை எல்லாம் வளர்த்து கொண்டு வந்து விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு பெரிய திரை, சின்னத்திரை என எந்தத் திரையாக இருந்தாலும் நடிப்பு மிக எளிதான விசயமாகி விடுகிறது. நான் இடைப்பட்ட காலங்களில் நடிக்காமல் இருந்தாலும் என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழித்தேன். எப்போதுமே நான் வீட்டை விட்டுப் பிரிந்திருக்க விரும்பியதில்லை. ஷூட்டிங் முடிந்தால் வீடு தான் என் ஒரே இலக்கு.

ஆனாலும் என் கணவர் தொடர்ந்து திரையுலகில் இருந்து வருவதால், இங்கே நடக்கும் எல்லா விசயங்களும் எனக்கு உடனடியாக அப்டேட் ஆகி விடும். நானும், என் கணவரான ராம்கியும் வீட்டிலிருக்கும் போது புதிதாக வெளி வந்துள்ள தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருப்போம். அதனால் நான் நீண்ட இடைவெளி விட்டிருந்த போதும் எனக்கு சினிமா உலகம் அந்நியமாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு விசயம் மட்டும் தான் எனக்கு வித்யாசமாகத் தோன்றுகிறது.

நான் நடிக்க வந்த போது ஷூட்டிங் நடைபெறும் சமயங்களில் அனைத்து நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு தளத்துக்குள் ஒன்றாக இணைந்து அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்போம். இன்று அப்படியொரு காட்சியைக் காணவே முடியவில்லை. இளம் நடிகர், நடிகைகள் ஆளுக்கொரு கேரவன் வைத்துக் கொண்டு ஷூட்டிங் இடைவேளையில் அவற்றுக்குள் புகுந்து கொள்கிறார்கள். அது ஒன்று தான் எனக்கு வியப்பாக இருந்தது. இப்படி இருந்தால் அவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள முடியும், எப்படி ஒருவருக்கொருவர் கலந்து பேச முடியும்? என்று தோன்றும் எனக்கு. ஆனால் இன்றைய நடிக, நடிகைகளின் திறனைக் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் மிகுந்த திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள் என்கிறார் நிரோஷா.

அது மட்டுமல்ல, நடிக்கத் தொடங்கி இத்தனை ஆண்டுகள் கடந்தும் நான், நதியா மற்றும், சுகன்யா உள்ளிட்டோர் இப்போதும் எங்களது தோற்றத்தில் கவனம் செலுத்தி வருவதால் புதிய வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளும் ஆவலுடன் தான் இருக்கிறோம். நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழ், தெலுங்கில் வித்யாசமான குணச்சித்திர கதாபாத்திரங்களை வரவேற்கும் முடிவில் இருக்கிறோம் என்றும் நிரோஷா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com