விநாயகரைக் குறித்த கேலிப் பேச்சால் ராம் கோபால் வர்மா மீது வழக்கு!

திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது
விநாயகரைக் குறித்த கேலிப் பேச்சால் ராம் கோபால் வர்மா மீது வழக்கு!
Published on
Updated on
1 min read

திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களைக் குறித்தும், திரை உலகைப் பற்றியும் வெளிப்படையான கருத்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தினமும் எழுதி, அடிக்கடி சர்ச்சகைகளில் சிக்கிக் கொள்பவர் ஆர் ஜி வி என பாலிவுட்டால் அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா. 

தனது டிவிட்டர் பக்கத்தில் விநாயகரைப் பற்றி கிண்டலாக சில வரிகளை எழுதியுள்ளது பலருக்கு அதிர்ச்சி அளித்தது. வினாயகரைப் பற்றியும் அவரது உருவத்தைப் பற்றியும் கேலியாக ராம் கோபால் வர்மா எழுதியிருப்பது இந்து மதத்தை அவமதிப்பதாக இருந்தது. ராம் கோபால்வர்மாவின் கருத்தை எதிர்த்து இண்டஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் விவேக் ஷெட்டி என்பவர் மும்பய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்தேரியில் உள்ள மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்டரேட் கோர்ட் ராம் கோபால் வர்மாவுக்கு ஆகஸ்ட் 8-தேதிக்குள் ஆஜராகும்படி ஆணை விடுத்துள்ளது.

ராம் கோபால் வர்மாமைப் பொருத்தவரை இது அவருக்குப் புதிதல்ல. அடிக்கடி தனது டிவிட்டர் பக்கத்தில் முரண்பட்ட கருத்துக்களை பதிவிடும் வழக்கம் உடையவர். இதற்கு முன்னால் 2014-ல் மதங்களைப் பற்றி தனது கருத்தைச் சொல்லி கடும் கண்டனத்துக்கு உள்ளானார். கடவுளுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் அவனை வணங்கும் மக்களை ஏன் தாக்குதலுக்கு உள்ளாக்கி வேடிக்கைப் பார்க்கிறான் போன்ற கருத்துக்களை தொடர் பதிவுகளாக தனது டிவிட்டரி வெளியிட்டார். மேலும் நான் கடவுளை கும்பிடுவதில்லை சாத்தானை கும்பிடுவேன் என்று பதிவிட்டிருந்தார்.

இந்து மதத்தையும், இந்துக் கடவுளரையும் தொடர்ந்து தன்னுடைய கேலிப் பேச்சுக்களால் அவமதிக்கும் ராம் கோபால் வர்மாவின் செயல் கண்டனத்துக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com