துருவங்கள் 16 பட இயக்குனரை தொலைபேசியில் பாராட்டிய நடிகர் விஜய் 

கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த 'துருவங்கள் 16' பட இயக்குநர் கார்த்திக் நரேனை நடிகர் விஜய்  தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்
துருவங்கள் 16 பட இயக்குனரை தொலைபேசியில் பாராட்டிய நடிகர் விஜய் 
Updated on
1 min read

சென்னை: கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த 'துருவங்கள் 16' பட இயக்குநர் கார்த்திக் நரேனை நடிகர் விஜய்  தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'துருவங்கள் 16'. கடந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த இந்தப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் தங்களுடைய சமூக வலைதளத்திலும், நேரிலும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யும், இயக்குநர் கார்த்திக் நரேனை தொலைபேசியில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் பாராட்டியது குறித்த தகவலை கார்த்திக் நரேன்  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com