விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஐக்கிய நாடுகள் சபையில் விரைவில் ஐஷ்வர்யா தனுஷின் பரத நாட்டியம் 

நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் விரைவில் நமது பாரம்பரிய நடன கலைகளுள் ஒன்றான பரத நாட்டியத்தை விரைவில் ஐ.நா.வில் அரங்கேற்ற இருக்கிறார்.

News image
Updated On :5 மார்ச் 2017, 9:28 am

DIN

வாஷிங்டன்: நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் விரைவில் நமது பாரம்பரிய நடன கலைகளுள் ஒன்றான பரத நாட்டியத்தை விரைவில் ஐ.நா.வில் அரங்கேற்ற இருக்கிறார்.

உலகமெங்கும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடபப்டுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், இந்திய கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் ஐஸ்வர்யா தனுஷ்  நமது பாரம்பரிய நடன கலைகளுள் பரத நாட்டியத்தை ஐ.நா.வில் அரங்கேற்ற இருக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும், இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஐ.நா சபைக்கு நடனமாட அழைக்கப்பட்டுள்ளவர் இவர்தான் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.