பாகுபலியாக ஹிருத்திக் ரோஷனா? இல்லவே இல்லை பிரபாஸ் மட்டும் தான்... தொடரும் பாகுபலி சர்ச்சைகள்!

இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மெளலி பாகுபலிக்காக மனதில் நிரப்பி வைத்திருந்த உருவம் பிரபாஸ் மட்டுமே தான், அவரைத் தவிர வேறெவரையும் அல்ல! என ராணா
பாகுபலியாக ஹிருத்திக் ரோஷனா? இல்லவே இல்லை பிரபாஸ் மட்டும் தான்... தொடரும் பாகுபலி சர்ச்சைகள்!
Updated on
1 min read

'பாகுபலி' திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாக இந்திய திரைப்பட உலகின் சாதனையாக இந்தியா கடந்து அயல்நாடுகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் படம் குறித்து பரப்பப் பட்டுக் கொண்டிருக்கும் சர்ச்சைகளுக்கும் முடிவே இல்லாது சென்று கொண்டிருக்கிறது. முதலில் இந்தப் படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி அணுகப் பட்டார். சம்பள விவகாரத்தில் மனத்தடை இருந்ததால் ஸ்ரீதேவி விலக ரம்யாவுக்கு அடித்தது யோகம்.இதை இயக்குனரே ஓரிருமுறை பாகுபலி வெற்றி மேடைகளில் கூறி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பிற முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகவும் இயக்குனர் முதலில் தேர்வு செய்திருந்தது வேறு வேறு நடிகர்களைத் தான் எனும் ரீதியில் ஒரு சர்ச்சை இணையத்தில் உலவிக் கொண்டிருக்கிறது. பாகுபலியால் உலகப் பிரசித்தி பெற்று விட்ட 'கட்டப்பா' கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனரால் முதலில் அணுகப் பட்டவர் மலையாள லேலட்டன் 'மோகன்லால்' என்று ஒரு வதந்தி உலவுகிறது. இதை யாரும் ஆமோதிக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை.

இது தவிர பிரதான கதாபாத்திரங்களான பாகுபலி, பல்வாள்தேவன் கதாபாத்திரங்களில் பல்வாள்தேவனுக்காக முதலில் அணுகப் பட்டவர் விவேக் ஓபராய் என்றும் பாகுபலிக்காக அணுகப் பட்டவர் ஹிருத்திக் ரோஷன் என்றும் ஒரு வதந்தி பாலிவுட்டில் உலவிக் கொண்டிருக்கிறது. ஹிருத்திக் ரோஷன் ‘மொஹஞ்சதாரோ’ திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் பாகுபலியை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த வதந்தியை தற்போது மறுத்திருக்கிறார் பாகுபலியில் பல்வாள்தேவனாக நடித்த ராணா டகுபதி.

அண்மையில் தனது டிவிட்டர் தளத்தில் அவர் வெளிட்ட கருத்தில்; பாகுபலி திரைக்கதை அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போதே பிரபாஸ் இந்த புராஜெக்ட்டில் இணைந்து விட்டார் என்றும், அவருக்கு அடுத்து இந்த திரைப்படத்தின் ஆரம்ப நிலையில் அவருக்குப் பின் கமிட் ஆனது தான் என்றும் அதனால் தனக்கு தெரிந்த வரையில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மெளலி பாகுபலிக்காக மனதில் நிரப்பி வைத்திருந்த உருவம் பிரபாஸ் மட்டுமே தான், அவரைத் தவிர வேறெவரையும் அல்ல! என ராணா தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com