அதர்வா நடிக்கும் இந்தப் படத்தில் ஹீரோவே இல்லையாம்!

ஜெமினி கணேஷனும், சுருளி ராஜனும்’ திரைப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ரெஜினா கஸாண்ட்ரா, பிரனதி, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி உட்பட 4 நாயகிகள் களமிறங்கியுள்ளனர்.
அதர்வா நடிக்கும் இந்தப் படத்தில் ஹீரோவே இல்லையாம்!
Updated on
1 min read

அதர்வா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படமான ‘ஜெமினி கணேஷனும், சுருளி ராஜனும்’ திரைப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ரெஜினா கஸாண்ட்ரா, பிரனதி, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி உட்பட 4 நாயகிகள் களமிறங்கியுள்ளனர். இவர்களோடு நகைச்சுவைக்காக சூரியும் இப்படத்தில் உள்ளார்.

இப்படம் குறித்துப் பேசுகையில் அதர்வா தெரிவித்தது; ஜெமினி கணேசனின் ரசிகரான அப்பா எனக்கு அந்தப் பெயரை வைப்பதாகக் கதை நகரும். இப்படத்தைப் பொறுத்தவரை ஹீரோ எனத் தனியாக ஒருவருக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகவில்லை. இப்படத்தின் 4 நாயகிகளோடு நான் மற்றும் சூரி உட்பட அனைவருக்கும் சமமாக தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்குமே சம வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் இப்படத்தில் ஹீரோவே இல்லை என்றும் சொல்லலாம். அல்லது எல்லோருமே ஹீரோக்கள் தான் என்றும் சொல்லலாம். ஓடம் இளவரசு இயக்கத்தில்  அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவாவின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும்  இத்திரைப்படம்  தயாரிப்பு அளவில் சிவாவுக்கு 25 வது திரைப்படமாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com