அமீர்கானின் ஆசை நிறைவேறுமா?

கர்ணனாக நடிக்க ஆசை தான் ஆனால் கர்ணனாக நடிப்பதற்கேற்ற 6 அடி 6 இஞ்ச் உயரமான உடல்வாகு எனக்கு இல்லையென்று தோன்றுவதால் நான் கிருஷ்ணராக நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
அமீர்கானின் ஆசை நிறைவேறுமா?
Published on
Updated on
1 min read

அமீர்கானுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் இடையிலான உரையாடலொன்றில்; எஸ்.எஸ்.ராஜமெளலியின் படங்கள் குறித்து இளம்பெண்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமீர்கான்; எஸ்.எஸ். ராஜமெளலி மிகத் திறமையான இயக்குனர். அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்புகள் அமைந்தால் தான் அதை தவற விடப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். அப்போது எஸ்.எஸ்.ராஜமெளலி ‘மகாபாரதத்தை’ திரைப்படமாக எடுக்கவிருக்கிறாராம். அதில் நடிக்க உங்களை அணுகினால் நீங்கள் எந்த வேடத்தில் நடிப்பீர்கள்? என்று ஒரு இளம்பெண் கேட்டார். அதற்கு அமீர்கான் மிகுந்த பரவசமாகி; என்ன ராஜமெளலி மகாபாரதம் எடுக்கப் போகிறாரா? அப்படியானால் அதில் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் இரண்டு உண்டு. ஒன்று கர்ணன் மற்றொன்று கிருஷ்ணர். 

கர்ணனாக நடிக்க ஆசை தான் ஆனால் கர்ணனாக நடிப்பதற்கேற்ற 6 அடி 6 இஞ்ச் உயரமான உடல்வாகு எனக்கு இல்லையென்று தோன்றுவதால் நான் கிருஷ்ணராக நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

அமீர்கானின் ஆசை நிறைவேறுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com