பிரபாஸின் வருங்கால மனைவி இவர் தானா?

பாகுபலி வெற்றிகளுக்குப் பிறகு இன்று இந்தியாவே பதில் அறிந்து கொள்ள விரும்பும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது, பிரபாஸுக்கு எப்போது திருமணம்? எனும் மகா முக்கியமான கேள்வி.
பிரபாஸின் வருங்கால மனைவி இவர் தானா?
Published on
Updated on
1 min read

பாகுபலி வெற்றிகளுக்குப் பிறகு இன்று இந்தியாவே பதில் அறிந்து கொள்ள விரும்பும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது, பிரபாஸுக்கு எப்போது திருமணம்? எனும் மகா முக்கியமான கேள்வி. டோலிவுட்டில் பலவிதமான யூகங்களும், வதந்திகளும் உலவினாலும் இதுவரை அதிகாரப் பூர்வமான தகவல்கள் எதுவும் பிரபாஸ் தரப்பிலிருந்து வெளியாகவில்லை. முதலில் பாகுபலி1& 2 திரைப்பட வேலைகளால் தான் திருமணம் தள்ளிப் போவதாகக் கூறினார்கள். இடையில் மறைந்த ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ஆரின் மகளான ஒய்.எஸ்.ஷர்மிளாவுடன் பிரபாஸுக்கு காதல் என்றார்கள். அதை வதந்தி என இரு தரப்பும் பின்னர் நிரூபித்தது. 

பாகுபலி 1 படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரபாஸின் பெரியப்பாவும் பிரபல தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜூ, பிரபாஸுக்கு பொருத்தமான வரனை குடும்பத்தினர் தேடிக் கொண்டிருப்பதாகவும் பாகுபலி 2 பட வேலைகள் முடிந்ததும் மணமகள் குறித்த அறிவிப்பும், திருமண அறிவிப்பும் சேர்ந்தே தமது குடும்பத்தினர் சார்பாக வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரபாஸிடம் அவரது திருமணம் எப்போது? என்பது குறித்து கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவரது பதில்கள், எனக்கே அதைப் பற்றி இப்போது ஒன்றும் தெரியாது... என்பதாகவே இருந்தது. இதற்கிடையில் பாகுபலி 2 பெரு வெற்றியைத் தொடர்ந்து; பெருகி வரும் பிரபாஸ், அனுஷ்கா ரசிகர் பட்டாளங்களிடமிருந்து; அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தும் ஆலோசனைகள் பிரபாஸின் முகநூல் பக்கங்களில் அதிகரித்து வருகின்றன.

தற்போது நேற்று முதலே ஊடகங்களில் பிரபாஸுக்கும், பிரபல தொழிலதிபரான ராசி சிமெண்ட்ஸ் ஓனரான பூபதி ராஜூவின் பேத்திக்கும் திருமணம் நிச்சயமாகலாம் என்பதாக ஒரு செய்தி உலா வருகிறது. இந்தச் செய்தியிலும் பிரபாஸ் குடும்பத்தினரின் அதிகார பூர்வமான ஒப்புதல்கள் எதுவும் இல்லை. இரு குடும்பங்களுக்கும் இடையில் திருமணப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றி பெற்றால் இவர்களது திருமணம் இரு குடும்பத்தார் சார்பாக உறுதி செய்யப்பட்டு ஊடகத்தினருக்கு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆக இப்போதும் பிரபாஸ் ரசிகர்களுக்குத் திருமண கொண்டாட்டத்துக்கு இடமில்லை. குடும்பத்தினர் சார்பாக அவரது திருமணச் செய்தி வெளியிடப்படும் வரை இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியது தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com