ஈகோ காட்டாத ஓவியா! ரசிகர்கள் பாராட்டு!

பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆரவ் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்
ஈகோ காட்டாத ஓவியா! ரசிகர்கள் பாராட்டு!
Updated on
2 min read

பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆரவ் தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். பிக் பாஸ் வீட்டில் தன்னுடன் வாழ்ந்த நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்திருந்தார் ஆரவ்.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு ஒரு கெட்டுகெதராக அவர்களுக்கு அமைந்தது. ஆரவ், கணேஷ், ரைஸா, ஹரீஷ் உள்ளிட்ட அனைவருக்கும் சினிமா வாய்ப்புக்கள் தேடி வந்து கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டார்கள். 

தங்களுடைய பிஸி நாட்களிலும் ஆரவிற்கு வாழ்த்துச் சொல்ல இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் பிக் பாஸ் குடும்பத்தினர். ரைஸா மற்றும் கணேஷ் இருவரும் எடுத்த புகைப்படஙக்ளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஓவியாவும் இந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டார் என்பது கணேஷ் வெளியிட்ட ஃபோட்டாவின் மூலம் தெரிய வந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

கணேஷ் ஓவியாவுடன் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் பார்ட்டியில் கலந்து கொண்டு இறுதியில் அப்புகைப்படம் எடுக்கப்பட்டதால், அதில் ஓவியா களைப்புடன் காணப்பட்டார். இந்த விழாவில் கலந்து கொள்ளவும், மீண்டும் பிக் பாஸ் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கவும் ஓவியா தயங்கவில்லை. ஆரவ் ஏற்பாடு செய்திருந்தார் என்றும் ஈகோ காட்டவில்லை. வெளிப்படையான பேசிப் பழகும் இயல்புடைய ஓவியா தன்னை மதித்து பார்ட்டிக்கு அழைப்பு விடுத்திருந்த ஆரவிற்கு பதில் மரியாதை செய்யும் விதமாக பார்ட்டிக்குச் சென்றார்.

வழக்கம் போல அதே புன்னகையுடன் நிழழ்ச்சியில் பங்கேற்ற் ஓவியா, ஆரவ்வை வாழ்த்திவிட்டு, பார்ட்டியை கலகலப்பாக்கினார். சிறிது நேரம் பிக் பாஸ் நண்பர்களுடன் அரட்டை மற்றும் ஃபோட்டோ எடுத்துவிட்டுக் கிளம்பினார். அதுதான் ஓவியாவின் குணம் என்று வியந்து பாராட்டினார்கள் அவரது ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com