
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது.
மெர்சல் படத்தின் வசூல் ரூ. 200 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மெர்சல் படக்குழுவினருக்கு வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் விஜய். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான், அட்லி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். ரஹ்மான் இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.