கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் நடிக்கும் வர்மா: இசையமைப்பாளர் குறித்து நீடிக்கும் குழப்பம்!

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:06 pm

எழில்

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கியுள்ள படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.

இந்தப் படத்தின் தமிழ்  ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ளார். திரையுலகில் துருவ் அறிமுகமாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கவுள்ளார். மலையாளப் படத் தயாரிப்பாளரான ஈ4 எண்டர்டெயிண்மெண்டைச் சேர்ந்த முகேஷ் மேத்தா இப்படத்தின் தயாரிப்பாளர்.

வர்மா என்கிற இப்படத்தின் தலைப்பும் முதல் தோற்றத்தின் போஸ்டரும் விக்ரமின் இன்ஸ்டகிராம் தளத்தில் நேற்று வெளியிடப்பட்டபோதும் இசையமைப்பாளரின் பெயர் குறித்த தகவல் எதுவும் அதில் இடம்பெறவில்லை. இதனால் இது குறித்த குழப்பம் இன்னும் நீடிக்கிறது. 

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா நியமிக்கப்படுவார் என்று பேசப்படுகிறது. பாலாவின் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். நந்தா, அவன் இவன் ஆகிய படங்களுக்கு மட்டும் யுவன் சங்கர் ராஜாவும் பரதேசி படத்துக்கு ஜிவி பிரகாஷும் இசையமைத்தார்கள். இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக் படத்துக்கு யுவன் இசையமைப்பார் என்றும் இதுகுறித்த தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், அர்ஜூன் ரெட்டி போன்ற ஒரு காதல் படத்துக்கு ராஜாவின் இசை மிகவும் பொருத்தமாக இருக்கும். எனவே பாலா தனது ஆஸ்தான இசையமைப்பாளரையே இந்தப் படத்திலும் பயன்படுத்துவார் என்று இளையராஜாவின் ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். ரசிகர்களின் விருப்பம் நிறைவேறுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.