அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கின் ஹீரோயின் யார்?
தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கை பாலா இயக்குகிறார்


தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கை பாலா இயக்குகிறார் என்பதும், விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்த செய்திதான்.
அறிவிப்பு வந்த நாளிலிருந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இடம்பெற்றுவிட்ட இந்தப் படத்தின் டைட்டில் 'வர்மா' என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தின் மற்ற நடிகர் மற்றும் டெக்னிஷியன் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் கதாநாயகியின் படத்தை தி ரியல் சியான் என்ற டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் முகம் தெரியவில்லை. விரைவில் இப்படத்தின் கதாநாயகியின் படங்கள் வெளிவரும் என்கிறார்கள் படக்குழுவினர். பாலாவின் 'வர்மா' என்ற டைட்டில் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...