
உதயம் NH4, பொறியாளன் ஆகிய படங்களை இயக்கிய மணிமாறன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். வெற்றிமாறன் தயாரிக்கும் அந்தப் படத்தின் தலைப்பு 'சங்க தலைவன்'.
கைத்தறி நெசவாளர்களின் பிரச்னையை காத்திரமாகப் பேசவிருக்கும் இந்தத் திரைப்படம் சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் நடக்கும் உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாகும்.
இப்படத்தில் நெசவாளர் சங்கத் தலைவனாக சமுத்திரக்கனி நடிக்கிறார். தற்போது சமுத்திரகனி ஆண் தேவதை, காலா, பேரன்பு, மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிப்பில் கொளஞ்சி என்ற படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.
ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய படங்களில் நடித்துள்ள சின்னத்திரை தொகுப்பாளினியான ரம்யா, சங்கத் தலைவனில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ரம்யா பளு தூக்குவதில் ஆர்வமுள்ளவர், அத்துறையில் மெடல்களை பெற்று சாதித்து வருகிறார். சங்க தலைவன் படத்தின் கதையம்சம் பிடிக்கவே, கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
கருணாஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவில் படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றனர் படக்குழுவினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.