மெர்சல் படத்துக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கத் தடைக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது...
மெர்சல் படத்துக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!
Updated on
1 min read

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கத் தடைக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான். மெர்சல் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெர்சல் படத்துக்கு அதிகக் கட்டணம் வசூலிக்க தடைக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு செயலற்று இருப்பதாக தேவராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, இந்த வழக்கில் பொதுநல நோக்கு கொண்டதாக இருப்பதால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற, பதிவாளருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

விஜய்யின் முந்தைய படமான பைரவாக்கும் இதுபோன்றதொரு வழக்கு தொடரப்பட்டது. பைரவா படத்துக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடவும் கூடுதலாக வசூலிக்கக்கூடாது. 2009-ல் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்கவேண்டும். இதைமீறி திரையரங்குகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com