

விஜய் ஆண்டனி நடிப்பில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன் ஆகிய படங்கள் பெரிதும் கவனம் பெற்றன. தற்போது அவரது நடிப்பில் வெளிவர இருக்கும் அண்ணாதுரை ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. ஜி. ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் வித்யாசமாக அமைந்திருப்பதாக ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
படத்தின் ஃபஸ்ட் லுக் பெற்ற கவனத்தைப் போலவே ட்ரையலும் வைரலாகி உள்ளது. இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்தத் ட்ரைலர் முழுவதும் விஜய் ஆண்டனியின் வாய்ஸ் ஓவரில் பேசப்படும் வசனம் வரவேற்பினை பெற்றுள்ளது.
'அண்ணாதுரை' திரைப்படம் ஆரம்பம் முதல் பல தடைகளை சந்தித்து வந்தது. படப்பிடிப்பு நின்று மீண்டும் தொடங்கி தற்போது வெளியிடுவதற்குத் தயாரிவிட்ட நிலையில் பட ட்ரைலர் பெற்றுள்ள பாராட்டுக்கள் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் வரும் டிசம்பரில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் 'இந்திரசேனா' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.