
மிகப் பெரிய வெற்றிப் படங்களான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' இயக்கிய ராஜமெளலியின் அடுத்த படம் என்பது சஸ்பென்ஸாக இருந்து வந்தது. சற்று ஓய்விலிருந்த ராஜமெளலி தனது அடுத்தடுத்த படங்களைப் பற்றி மனம் திறந்துள்ளார்.
தயாரிப்பாளர் டி.வி.வி.தனய்யா தயாரிப்பில் சமூக சிந்தனையுடைய படமொன்றையும், அதனைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிப்பில் கே.எல்.நாராயணா தயாரிப்பில் மற்றொரு படத்தையும் இயக்கவுள்ளார் ராஜமெளலி. இரண்டு மொழியிலா அல்லது தெலுங்கில் மட்டுமா என்பதைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
தனது கனவுப் படைப்பான மகாபாரதத்தின் திரைக்கதையையும் ராஜமெளலி எழுதி வருகிறார். விரைவில் அதனை முடித்து விட்டு படத்தை மூன்று பாகங்களாக எடுக்கவுள்ளார். 400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் அந்தப் படம் பாகுபலியை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்றார் ராஜமெளலி. அந்தப் படத்தை எடுத்து முடிக்க தனக்கு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் ஆகும் என்று கருதுகிறார். இப்படத்தில் நடிக்க பாலிவுட் நட்சத்திரங்களான அமீர் கான் மற்றும் ஷாருக் கான் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதிலும் அமீர் கான் கிருஷ்ணராக நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். ஷாருக் கான் கர்ணனான நடிக்கலாம். ஆனால் எதுவும் முடிவாக நிலையில் இந்தக் கனவுப் படம் இப்போதைக்கு அதன் மிக ஆரம்பக் கட்டமான எழுத்தாக்கத்தில் உள்ளது.
இந்தப் படம் எந்த மொழியில் எடுக்கப்பட்டாலும் ரசிகர்களிடையே அது மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிடும் என்பது ராஜமெளலியின் உழைப்புக்குக் கிடைத்த பரிசு எனலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.