அமெரிக்காவில் ரஜினி படங்களுக்கு அடுத்ததாக அதிகம் வசூலித்த தமிழ்ப் படம்!

அமெரிக்காவில் ரஜினியின் படங்களையடுத்து அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்கிற பெருமையை மெர்சல் பெற்றுள்ளது...
அமெரிக்காவில் ரஜினி படங்களுக்கு அடுத்ததாக அதிகம் வசூலித்த தமிழ்ப் படம்!
Updated on
1 min read

அமெரிக்காவில் வெளியான தமிழ்ப் படங்களில் அதிகம் வசூல் கண்ட படங்களின் பட்டியலில் ஐந்தே நாள்களில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது மெர்சல்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன்,  சமந்தா, காஜல் அகர்வால் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில் அதிகம் வசூலித்த விஜய் படம் என்கிற பெருமையை மெர்சல் பெற்றுள்ளது. மேலும் அமெரிக்காவில் விஸ்வரூபம் வசூலித்ததை விடவும் அதிக வசூல் பெற்று டாப் 5 தமிழ்ப் படங்களில் ஒன்றாக உள்ளது மெர்சல்.

அமெரிக்காவில் ஐந்து நாளில் 1.1 மில்லியன் டாலர் வசூலித்து (ரூ. 7.15 கோடி) சாதனை செய்துள்ளது. இன்றைய தேதியில் மெர்சலை விடவும் கபாலி, எந்திரன், லிங்கா ஆகிய ரஜினி படங்களே அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதியில் இந்தப் படங்களின் வசூலை மெர்சல் தாண்டிவிடுமா என்பது தெரிந்துவிடும். 

அமெரிக்காவில் ரஜினியின் படங்களையடுத்து அதிக வசூல் செய்திருப்பது விஜய் நடித்த மெர்சல் படம்தான். இதே வேகத்தில் சென்று விரைவில் 2 மில்லியன் டாலர் வசூலைத் தொடுமா, ரஜினி படங்களைத் தாண்டுமா என்கிற எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com