
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனோரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் கடந்த வருடம் ஜூலை 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நட்சத்திர ஹோட்டலொன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்று கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், மனு ரஞ்சித் - அக்ஷிதா ஆகியோருக்கு இன்று திருமணம் சென்னையில் நடைபெற்றது. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் தலைமையில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.