3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் நஸ்ரியா!

நஸ்ரியாவின் புதிய அத்தியாயமாகக் குறிப்பிடப்படும் அஞ்சலி மேனனின் இந்தப் படம்...
3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் நஸ்ரியா!
Updated on
1 min read

2014 ஆகஸ்டில் ஃபகத் ஃபாசிலைத் திருமணம் செய்த நஸ்ரியா, அதற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

பெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனனின் அடுத்தப் படத்தில் நஸ்ரியா நடிக்கிறார். பார்வதி, ப்ருத்வி சுகுமாரன் போன்ற நடிகர்களும் நடிக்கும் படத்துக்கு இசை - ஜெயசந்திரன் & ரகு தீக்‌ஷித். இந்த வாரம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. 

அஞ்சலி மேனனின் பெங்களூர் டேஸ் படத்தில் ஒன்றாக நடித்தபோதுதான் நஸ்ரியாவும் ஃபகத் ஃபாசிலும் காதலிக்க ஆரம்பித்தார்கள். பார்வதியும் அந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அஞ்சலி மேனன், நஸ்ரியா, பார்வதி ஆகிய மூவரும் மீண்டும் இணையவுள்ளார்கள். 

அஞ்சலி மேனனின் இந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com