

சேரனின் கடைசியாக இயக்கிய படம் ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை. நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது சேரன், 'அவசரம் மிக அவசரம்' எனும் படத்துக்கு பாடலாசிரியராக மாறிவிட்டார்.
இயக்குனர் சுரேஷ் காமாட்சி படத்தின் கதையை சேரனிடம் கூறியபோது சேரன் அப்படத்துக்குப் பாடல் எழுதச் சம்மதித்தார். போலீஸ் வாழ்க்கைப் பற்றிய பதிவு செய்யப்படாத பக்கங்களை மையப்படுத்தி வித்யாசமாக உருவாகி இருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’ என்றார் அவர்.
தயாரிப்பாளராக இருந்த சுரேஷ் காமாட்சி இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் அவசரம் மிக அவசரம். இப்படத்தின் கதை வசனத்தை எழுதியவர் ஜெகன்ஜி என்று கோலிவுட்டில் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் ஜெகன். பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா, ஹரீஷ், முத்துராமன், வி.கே.சுந்தர், சக்தி சரவணன், அரவிந்த், ராமதாஸ், லிங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது இத்திரைப்படம்.
இஷான் தேவ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஒரே ஒரு பாடல்தான் இடம்பெற்றுள்ளது. பெண்ணிற்கோர் தீமை செய்தோம் எனத் தொடங்கும் அந்தப் பாடல் தான் சேரன் எழுதிய பாடல். படத்தின் கதையால் கவரப்பட்டு சேரன் தானாகவே முன்வந்து இப்பாடலை எழுதி பாடலாசிரியராக மாறிவிட்டார். இஷான் தேவ் இப்பாடலை பாடியுள்ளார.
இந்தப் பாடலை சமீபத்தில் இயக்குநர் ராம் யூட்யூப்பில் வெளியிட்டு வாழ்த்தினார். சேரனின் இந்தப் பாடல் ரசிகர்களிடையே கவனிக்கத்தக்க வரவேற்பினைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.