உலகளவில் அதிக லைக்ஸ்: விஜய்யின் மெர்சல் டீசர் சாதனை!

சமீபத்திய நிலவரப்படி 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி பார்வைகள்...
உலகளவில் அதிக லைக்ஸ்: விஜய்யின் மெர்சல் டீசர் சாதனை!
Updated on
1 min read

டீசர் வெளியான 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி பார்வைகள். 

எனவே, யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற சாதனையைப் படைத்துள்ளது மெர்சல் டீசர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை - ஏ.ஆர்.ரஹ்மான். நேற்று இயக்குநர் அட்லியின் பிறந்தநாள். அதனையொட்டி மெர்சல் பட டீசர் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களில் டீசர் சாதனை படைத்துள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட விவேகம் டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளைப் பெற்றது. கபாலி படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை அடைந்தது. அதுவே தமிழ்ப் படங்களில் உச்சபட்ச சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை விவேகம் முறியடித்தது. 

மேலும் 'ஸ்டார்வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி' என்ற ஹாலிவுட் படத்தின் டீசர் 5,72,000 லைக்குகளைப் பெற்றிருந்தது. அதுவே அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையைக் கொண்டிருந்தது. அதைக் கடந்து, விவேகம் படத்தின் டீசர் லைக்ஸ் எண்ணிக்கையில் முதல் இடத்தைப் பிடித்தது. இதனால் உலகளவில் யூடியூபில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையைச் சமீபத்தில் பெற்றது (மே 10-ம் தேதி வெளியிட்ட விவேகம் பட டீசரின் தற்போதைய லைக்ஸ் எண்ணிக்கை - 5,99,000; 2.13 கோடி பார்வைகள்).

இந்தச் சாதனைகளை மிக எளிதாக முறியடித்துள்ளது மெர்சல் டீசர். 

சமீபத்திய நிலவரப்படி 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி (10,205,444) பார்வைகள் என டீசர் வெளியான 20 மணி நேரங்களில் இந்த உச்சபட்ச எண்ணியை அடைந்துள்ளது மெர்சல் டீசர். இதையடுத்து யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற பெருமையை மெர்சல் பட டீசர் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com