ஸ்பைடர் முதல் நாள் வசூல் எவ்வளவு?: அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகளவில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன...
ஸ்பைடர் முதல் நாள் வசூல் எவ்வளவு?: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

ஸ்பைடர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்துள்ளார்கள்.

நேற்று வெளியான இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ எனப்படும் சிறப்புக் காட்சி அமெரிக்காவில் செவ்வாய் அன்று நடைபெற்றது. அதில் மட்டுமே 1 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

பாகுபலி படத்தின் இரு பாகங்கள் மற்றும் கைதிநெ.150 ஆகிய படங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் சிறப்புக் காட்சி மூலமாக மட்டும் 1 மில்லியன் டாலர் வசூலித்த தெலுங்குப் படம் என்கிற சாதனையை ஸ்பைடர் படம் பெற்றுள்ளது. மொத்தமாக  $ 1,005,630 அதாவது ரூ. 6.59 கோடி வசூலித்துள்ளது. பாகுபலி 2 படம் அமெரிக்காவில் முதல் நாளில் ரூ. 1.07 மில்லியன் டாலர் வசூலித்தது.

இந்நிலையில் உலகளவில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்பைடர் படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்தப் படம் முதல் நாளன்று உலகம் முழுக்க ரூ. 51 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர் 2 வரை தொடர் விடுமுறைகளாக உள்ளதால் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com