வெளியேறும் போட்டியாளர் யார்? சர்ச்சையை ஏற்படுத்தும் விஜய் டிவியின் ட்வீட்! 

இதை எதிர்பாராத விஜய் டிவி, இதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டு எச்சரிக்கை செய்கிறதா என்கிற சந்தேகமும்...
வெளியேறும் போட்டியாளர் யார்? சர்ச்சையை ஏற்படுத்தும் விஜய் டிவியின் ட்வீட்! 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

 சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படவேண்டியவர்களின் பட்டியலில் மூவர் இடம்பிடித்துள்ளார்கள். ஓவியா, ஜூலி, வையாபுரி. யார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரவேண்டுமோ, அவர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கவேண்டும். மூவரில் குறைவான வாக்குகளைப் பெற்றவர், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார். இதுவரை அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, நமீதா ஆகியோர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பரணி, ஸ்ரீ ஆகியோர் சொந்தக் காரணங்களுக்காக வெளியேறியுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த வாரமும் ஓவியாவுக்கு பலர் வாக்களித்து வருவது சமூகவலைத்தளங்கள் வழியாகத் தெரியவருகிறது. இதனால் இந்த வாரமும் ஓவியா காப்பாற்றப்படுவார் என்றறியப்படுகிறது. இதனால் ஜூலி, வையாபுரி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்நிலையில் விஜய் டிவி ட்விட்டர் தளத்தில் நேற்று திடீரென ஒரு ட்வீட் வெளியிடப்பட்டது. 

இந்த ட்வீட்டை முன்னிட்டு சில விவாதங்கள் எழுந்துள்ளன. அதாவது, விஜய் டிவி வெளியேற நினைக்கும் நபருக்கு ரசிகர்கள் அதிகமாக வாக்களிப்பதால் இதுபோன்ற ஒரு ட்வீட் வெளியிடப்பட்டதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை வாக்குகள் அளிப்பதில் எந்த ரசிகருக்கும் குழப்பம் எதுவும் இருந்ததில்லை. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வாக்களிப்பது தொடர்பாக இதுபோன்ற ஒரு ட்வீட்டை விஜய் டிவியும் வெளியிடவில்லை. எனில், திடீரென ரசிகர்களுக்கு வாக்களிப்பது தொடர்பாகப் பாடம் எடுப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

ஓவியாவுக்கு எதிராக இருப்பதால் ஜூலிக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்து வருவது சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளைக் கொண்டு அறியப்படுகிறது. அதேசமயம் ஜூலியின் மேல் பரிதாபம் கொண்டு பலர் அவருக்கு ஆதரவாகவும் வாக்களித்து வருகிறார்கள். இதை எதிர்பாராத விஜய் டிவி, இதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டு எச்சரிக்கை செய்கிறதா என்கிற சந்தேகமும் ஏற்படுகிறது.

இந்த ட்வீட்டை முன்வைத்து இன்னொரு கருத்தும் உலவுகிறது. ஜூலிக்கு எதிராக உள்ளவர்கள், வையாபுரிக்கும் வாக்களிப்பதால் அவருக்கு விழும் வாக்குகள் விஜய் டிவியைக் குழப்பிவிட்டிருக்கிறது. ஒருவேளை ரசிகர்கள் தவறாக வாக்களிக்கிறார்களோ என்றெண்ணி அதுபோன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டு ரசிகர்களைத் தெளிவுபடுத்த முயல்கிறது என்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இதுதொடர்பான சர்ச்சை, விவாதங்களால் இந்த வார பிக் பாஸில் வெளியேறும் நபர் குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com