தீபாவளி ரேஸில் போட்டியிடும் மூன்று அதிரடி படங்கள்!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று ரிலீஸாகும் படங்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
தீபாவளி ரேஸில் போட்டியிடும் மூன்று அதிரடி படங்கள்!
Published on
Updated on
2 min read

ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று ரிலீஸாகும் படங்களுக்கு அதிகளவில் எதிர்ப்பார்ப்பு இருக்கும். இந்த வருடம் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் உருவாகியுள்ள பரபரப்பை யூ ட்யூப் உலகறியும். இப்படத்தின் ஒரே ஒரு பாடல் வைரலாகி இருக்கும் நிலையில் அனைத்து பாடல்களும் ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னையில் ஒரு பிரம்மாண்ட விழாவில்  வெளியிடப்படவுள்ளது.

அக்டோபர் 19 தீபாவளி அன்று ரிலீஸாகும் படங்களைப் பற்றிய தகவல்களும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கிடைத்த தகவலின்படி தீபாவளிக்கு மூன்று படங்கள் ரிலீஸாகிறது. அவற்றின் விபரங்கள் :

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸாகிறது என்று படக்குழுவினர் முன்பே அறிவித்துவிட்ட நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதி 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி, விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க தேனாண்டாள் பிலிம்ஸ் முடிவு செய்துள்ளது. சமந்தா, வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா என்று பலரும் நடித்துள்ள இப்படத்தில் பாடலான ஆளப் போறான் தமிழன் யூட்யூப்பில்   வெளியான ஒருசில  நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பார்வையாளர்களைப் பெற்றது. அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்களும், கிட்டத்தட்ட 5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றது. 

தீபாவளி அன்று ரிலீசாகும் மற்றொரு படம் விக்ரம் நடித்துள்ள 'ஸ்கெட்ச்’. கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரித்துள்ள படமிது. மிக பிரம்மாண்டமான செலவில் தயாராகும் இந்த படத்தில் விக்ரம், தமன்னா, பிரியங்கா, சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், ஹரீஷ், ஸ்ரீமன், ரவிகிஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் விஜய் சந்தர். ஆக்‌ஷன் வகைப் படமான ஸ்கெட்ச், வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முந்தைய படங்களைவிட மிகவும் வித்யாசமாக இருக்கும் என்கிறார் இயக்குனர். விக்ரமின் ஸ்டைலிஷ் லுக்ஸ் படத்துக்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. தீபாவளி வெளியீட்டுக்கு ’ஸ்கெட்ச்’ தயாராகி விடும் என்று படக்குழுவினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். 

புதுமுக இயக்குநர் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ் நடிக்கும் 'ஹர ஹர மஹாதேவகி' தான் தீபாவளி ரேஸில் பங்கெடுக்கும் மூன்றாவது படம்.

காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட இப்படத்தின் தலைப்பான 'ஹர ஹர மஹாதேவகி’, இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதொரு வாக்கியம். எனவே அடல்ட்ஸ் ஒன்லி காமெடியான இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு சற்று பலமாகவே கூடியுள்ளது. இப்படத்துக்கு பாலமுரளி இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'மெர்சல்', 'ஸ்கெட்ச்' ‘ஹர ஹர மஹாதேவகி’ ஆகிய மூன்று படங்களுமே தீபாவளிக்கு வெளியானால் வசூலில் பெரிய பாதிப்புக்கள் ஏற்படாது என்பது விநியோகஸ்தர்களின் கருத்து. இந்த ஹாட்ரிக் விருந்தைத் தவிர வேறு புதிய படங்கள் திடீரென தீபாவளி ரிலீஸுக்கு அறிவிக்கப்பட்டாலும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com