
டிக்டிக்டிக் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சரணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. அவருடைய 24-வது படம் இது.
தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, ஜெயம் ரவியின் ஜோடியாக நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்துக்கு இசையமைத்த சாம் சிஎஸ் இதில் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு சுந்தர்.சி-யின் சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.