
ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை அண்மையில் கவர்ந்தவர் ரகுல் ப்ரீத் சிங். அழகுப் பதுமையாக மட்டுமல்லாமல் நடிக்கும் திறனும் பெற்றுள்ளார்.
உங்களுக்கு எப்போது திருமணம் எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று பேட்டியில் நடிகைகளைக் கேட்கும்போது, பெரும்பாலும் நடிகைகள் திருமணமா எனக்கா இப்பவேவா அதைப் பத்தி எல்லாம் யோசிக்க நேரமே இல்லை போன்ற பதில்களைத் தான் சொல்வார்கள்.
கோலிவுட், டோலிவுட் என்று பிஸியாக இருக்கும் ரகுல் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு இப்படிப்பட்ட கணவர்தான் வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தனது திருமணம் குறித்து வெளிப்படையான சில கருத்துக்களைக் கூறினார்.
அவர் கூறியது, ‘நம்முடைய வாழ்க்கையில எது எப்போ நடக்கும்னு யாராலும் சொல்ல முடியாது. என்னோட கல்யாணமும் அப்படித்தான். எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அது எப்போது நடந்தாலும், அதில் ஒன்று மட்டும் நிச்சயம். எனக்குத் தெலுங்கு பேசும் மாப்பிள்ளைதான் வேண்டும்’ என்று கூறியிருக்கிறார் ரகுல்.
சமந்தாவைத் தொடர்ந்து ரகுலும் டோலிவுட் மணப்பெண்ணாக விருப்பம் தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ரகுலுக்கு இதுவரை சினிமா பிரபலங்களிடமிருந்து திருமணத்துக்கான ப்ரபோஸல்கள் எதுவும் வரவில்லையாம். டோலிவுட்டில் திருமண வயதில் இளம் ஹீரோக்கள் இருக்கும் நிலையில், அவர்களில் யாருக்கு ரகுலை மணப்பதற்கு விருப்பம் உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.