தலை கிறிஸ்துமஸ் கொண்டாடத் தயாராகும் சமந்தா அகினேனி - நாக சைதன்யா!

சம் சைய் என்று செல்லமாக டோலிவுட்டில் அழைக்கப்படும் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும்
தலை கிறிஸ்துமஸ் கொண்டாடத் தயாராகும் சமந்தா அகினேனி - நாக சைதன்யா!

சம் சைய் என்று செல்லமாக டோலிவுட்டில் அழைக்கப்படும் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் விமரிசையாகத் திருமணம் இந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் தத்தம் பட வேலைகளில் பிஸியாகிவிட்டனர் இந்த நட்சத்திர தம்பதியர். சமீபத்தில் தங்கள் திருமணத்தின் கடந்த மாதம் தங்களுடைய திருமணத்தின் முதல் மாத நிறைவை மனத்துக்குப் பிடித்த வகையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சமந்தா கிறுஸ்துவர். காதல் மனைவிக்காக தங்களுடைய தலை கிறுஸ்துமஸை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார் நாக சைதன்யா. திருமணம் முடிந்து 80 நாளில் கிறுஸ்துமஸ் தினம் வருவதால், அந்த நாளினின வெகு விமரிசையாகவும் மறக்க முடியாத ஒரு அழகிய தினமாகவும் கொண்டாட சமந்தா ஆசைப்பட்டார். அமலா மற்றும் நாகார்ஜுனாவுக்கும் மருமகளை மகிழ்விக்க விரும்பி கிறிஸ்துமஸை குடும்பமாகவே கொண்டாட முடிவு செய்துள்ளனர். சமந்தா தனது திருமணத்துக்கு ஆடை வடிவமைத்து அணிந்தது போலவே, கிறுஸ்துமஸ் உடையையும் டிசைனரின் வசம் ஒப்படைத்துவிட்டார்.

கிறுஸ்துமஸ் தினத்தையொட்டி தனது ஹைதாராபாத் வீட்டில் ஒரு பார்ட்டி கொடுக்க முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து வருகிறார். டோலிவுட் திரை பிரபலங்கள் முதல் தனது நண்பர்கள் வரை அழைக்கத் தொடங்கிவிட்டார் சமந்தா. தனது வீட்டில் 15 அடி உயரமுள்ள கிறுஸ்துமஸ் மரம் வைத்துள்ளார்.

அதில் அணிவிக்க பலவிதமான அலங்காரப் பொருட்களை வாங்க உற்சாகமாக ஷாப்பிங் செய்கிறார். அமலா தனது மருமகளுக்காக 27 ஸ்டார்களை கைப்பட தானே தயாரித்துக் கொடுக்க, உச்சி குளிர்ந்துவிட்டார் மருமகள் சமந்தா. பிறகென்ன அனைவருமே ஸ்டார்களாக நிறைந்த அந்தக் குடும்பத்தின் புதிய ஸ்டார் சமந்தா என்பதில் அவர்களுக்குப் பெருமைதான்.

கிறுஸ்துமஸ் அன்று தன் வீட்டில் மின்சாரத்துக்கு நோ சொல்லிவிட்டு வீடு முழுவதும் மெழுகுவர்த்திகளை ஏற்ற திட்டமிட்டுள்ளாராம் சமந்தா. இதற்கென கலர் கலராக டிசைன் டிசைனாக 1840 மெழுகுவர்த்திகளை வாங்குக் குவித்துள்ளார். அதென்ன 1840 என்ற கணக்கு என்று கேட்பவர்களுக்கு பதிலாக திருமணம் முடிந்த 80 நாட்கள் 24 மணி நேரத்தை குறிக்கவே அந்த ஏற்பாடு என்கிறார் 80 X 24 = 1840. இதில் 80 சிறிய மெழுகுவர்த்தியும் மற்றவை பெரிய மெழுகுவர்த்திகளுமாகும். வாழ்க்கையை வாழ்வதும், ரசித்து வாழ்வதற்கும் உண்டான வித்தியாசத்தை சமந்தா நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்.

சமந்தாவுக்கும் சைதன்யாவுக்கும் தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு மகிழ்கின்றனர் அவரது ரசிகர்கள்.                                                                                     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com